உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பழைய சட்டங்களை நீக்காது மறுசீரமைக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள பழமை வாய்ந்த சட்டங்கள் அனைத்தையும் இரத்துச் செய்யாமல், அவற்றின் தனித்துவத்தைப் பேணி தற்போதைய டிஜிட்டல் யுகத்திற்குப் பொருந்தும் வகையில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அரச சேவையை வினைத்திறனாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் “சட்ட மறுசீரமைப்பு” ஆரம்ப நிகழ்வு அமைச்சரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் இந்தச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. எமது நாட்டின் பெரும்பாலான சட்டங்கள் பிரித்தானிய காலத்துச் சட்டங்களாகும். அவற்றில் பல குறைபாடுகள் இருந்தாலும், அனைத்தையும் தூக்கியெறிய முடியாது. அவற்றின் சிறந்த அம்சங்களை உள்வாங்கி, தற்கால நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைப்பதே எமது இலக்கு.

2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து நாடு புதிய திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவாகும். பொருளாதார மேம்பாடு மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாகவே சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதற்காகவே நடைமுறைக்குச் சாத்தியமான புதிய சட்டங்களை இயற்றவும், உள்ள சட்டங்களைச் சீர்திருத்தவும் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.” – என்றார்.

இந்த மறுசீரமைப்பின் மூலம் அரச சேவையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாகும் என்றும் அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

39 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0