உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரி20 உலகக் கிண்ணம்: இந்தியா– நெதர்லாந்து இன்று நேரடிப் போட்டி.!

47 பார்வைகள்

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் குழு மட்டப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏ’ பிரிவில் அமெரிக்கா, நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தோற்கடித்து ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி பெற்றது.


இன்றைய போட்டி இந்தியாவின் அடுத்த சுற்று வாய்ப்பை பாதிக்காததால், முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.கடந்த இரண்டு போட்டிகளில் ஓட்டமின்றி அவுட் ஆன அபிஷேக் சர்மா, சுப்பர் 8 சுற்றுக்குள் தனது திறனை மீட்க போராடவுள்ளார்.


நெதர்லாந்து அணி ஸ்கொட் எட்வர்ட்ஸ் தலைமையில் பல ஆல்-ரவுண்டர்களைக் கொண்டிருப்பதால் இந்தியா மீது சவால் அளிக்கக் கூடும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (ஒருநாள் மற்றும் T20 சேர்த்து) இந்தியா–நெதர்லாந்து அணிகள் 4 முறை மோதியுள்ளன; அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0