இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்.!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுற்றில் இலங்கை–இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கைக்கு வந்துள்ளது.இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து நேற்று மாலை 4.15 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் குழாம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியுள்ளது.
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 32 பேர் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்கின்றனர்.‘சூப்பர் 8’ சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.