உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

76 பார்வைகள்

கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியா அணியினர் பாகிஸ்தான் அணியை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தினர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷானின் அதிரடியான துடுப்பாடும், சிறப்பான பந்துப் பரிமாற்றமும் இந்திய அணிக்கு தொடக்கத்தில் மூன்றாவது வெற்றியை பெற்றுக் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வழி வகுத்தது.


பரம எதிரிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், போட்டியின் முன்னும் பின்னரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர்கள் ஒருவரும் கைகுலுக்க மறுத்தனர்.நேற்றிரவு 07.00 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப் பெற்றது. இஷான் கிஷான் 40 பந்துகளில் 77 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) செய்தார், அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ஓட்டங்களைச் செய்தார்.


176 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்த பாகிஸ்தான் அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. ஹார்டிக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் சாஹிப் சாத்தா ஃபர்ஹான் ஓட்டமின்றி வெளியேறினார்.ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் இரண்டாவது ஓவரில் சைம் அயூப் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார், பாகிஸ்தான் 6-2 என்ற நிலையில் இருந்தது.அணித் தலைவர் சல்மான் ஆகா 4 ஓட்டங்களில் பும்ராவின் ஓவரில் தவறான துடுப்பாட்டம் காரணமாக வெளியேறி, பாகிஸ்தான் 13 ஓட்டங்களில் 3 விக்கெட் இழந்த மோசமான நிலையில் சென்றது.


சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பாபர் அசாமை 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தார்; இதனிடையே உஸ்மான் கான் சிறிது எதிர்ப்புத் தெரிவித்து 34 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்தார். ஆனால் அக்சர் படேலின் பந்தில், இஷான் கிஷானின் ஸ்மிடம்பிங் காரணமாக வெளியேறினார்.இதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களையே பெற்றது. இதனால் இந்தியா 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மற்றும் 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் சூப்பர் 8 இடத்தைப் பிடித்தது.


போட்டியின் முன்னும் பின்னரும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர்கள் ஒருவரும் கைகுலுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி உட்பட, பாகிஸ்தான் அணித் தலைவருடன் மூன்று போட்டிகளிலும் கைகுலுக்கவில்லை.இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் அடுத்ததாக நமீபியாவை எதிர்கொள்கிறது, இந்தியா பெப்ரவரி 18-ம் திகதி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0