உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நான்கு பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லை.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
73 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரைப் பற்றி இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காணாமல் போயுள்ள அமீர் அலி பாரிஸ் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அல்லது இவரை எவரேனும் கண்டால், உடனடியாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் +94 67 226 0222 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு குடும்பத்தினரும் பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

வீடொன்றில் நள்ளிரவில் திடீர் தீப்பரவல்.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத் தீப்பரவலின் காரணமாக குறித்த…

85 0 0
அம்பாறை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

61 0 0
அம்பாறை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

65 0 0
அம்பாறை செய்திகள்

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து பெண்கள்.!

அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப்…

94 0 0