உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுயநினைவற்றவர் தர்சானந்த் – யாழ். பழக்கடை வியாபாரிகள் போர்க்கொடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் தர்சானந்த் என குற்றம் சாட்டியுள்ள யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள், நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகரை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை இன்றையதினம் (13) முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர்கள் மேலும் கூறுகையில்,
நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது. அவரது இந்த பிரேரணையால் அவர் தனக்கு ஊடக விளம்பரத்தை தேடலாம். ஆனால் எமது வாழ்வியலை இழகச் செய்துதான் தனது விளம்பரத்தை தேடக்கூடாது. இவ்வாறான உறுப்பினரை தேர்ந்தெடுத்தது அப்பகுதி மக்களின் தவறாகவே நினைக்கின்றோம்.

எனவே, எமக்கு உரிய தீர்வு தராது எமது கடைகளை அகற்றினால் நாம் குடும்பங்களுடன் மாநகரை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0