உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டி20 உலகக் கிண்ணம்: நேபாளத்தை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தி இத்தாலி முதல் வெற்றி.!

45 பார்வைகள்

டி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல்முறையாக பங்கேற்றுள்ள இத்தாலி அணி, தனது இரண்டாவது போட்டியிலேயே நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனையாக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பையில் ‘சி’ குழுவுக்காக நேற்று (12) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அணித் தலைவர் ராகுல் படேல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச தனிநபர் பெறுபேறாக இருந்தது. பந்துவீச்சில் கிருஷான் களுகமகே சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.124 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலடி தொடங்கிய இத்தாலி அணி, 12.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.


ஜெஸ்டின் மொஸ்கா 44 பந்துகளில் 60 ஓட்டங்களையும், அன்தோனி மொஸ்கா 32 பந்துகளில் 62 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இவர்களின் தொடக்க இணைப்பு நேபாள அணிக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி ‘சி’ குழுவில் முக்கிய முன்னிலை பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0