உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
88 பார்வைகள்

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. இதனையடுத்தே கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அனைத்து எதிராளிகளும் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும், சாட்சிகளை பயமுறுத்த கூடாது, பிரதேசத்தின் பொது அமைதி மற்றும் சமய சகவாழ்விற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளும் மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இவ் நிபந்தையில் ஒன்றோ அனைத்துமோ எதிராளிகளால் மீறப்பட்டால் பிணை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியல் நடைமுறைக்கு வரும் எனவும் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0