உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திருமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் அடங்குவர். இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான பரிசீலனை என்பன நாளை நடைபெறவுள்ளன.

திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகியவற்றில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில், அவர்களுக்குச் சார்பாக நீதி கோரியும், அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்க வலியுறுத்தியும் ஆதரவாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0