டி20 உலகக் கிண்ண போட்டியில் கனடாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா.!
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் கனடா அணிக்கு 214 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.