உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பாடசாலையில் தற்போது மின்சார வசதி இல்லாமை மற்றும் மாணவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பில் இதன்போது அதிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

“தற்போது மாகாண சபையினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

அத்துடன், பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக உள்ள மின்சார இணைப்பினை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதேச சபையின் உப தவிசாளர் இதன்போது உறுதியளித்தார்.

இந் நிகழ்வில் சமாதான நீதவான் கோபாலசிங்கம், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், ஆலய நிருவாகத்தினர், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0