உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
73 பார்வைகள்

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட பூஜைகள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய முன்றலில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது.

பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமானது.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இவ் ஊர்வலம், கோவில்போரதீவு உதயதாரகை கலை விளையாட்டுக் கழக மைதானத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மைதானத்தில் அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் டெ.ரேணுகா தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரன் கோபிநாத் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

மதகுருமார்கள், ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் ஆசிரியர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், கிராம மூத்த உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாச்சார உத்தியோகத்தர், விளையாட்டுக் கழக தலைவர், கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில், அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

நிகழ்வின் நிறைவில், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0