உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
87 பார்வைகள்

மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பி.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் இன்று (08) திகதி இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின்
பிரதான இணைப்பாளர் சகோதரர் வீ.கே.சுரேந்திரன் கலந்து கொண்டு ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

மகா சிவராத்திரியினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் (17) திகதி கல்லடி கடற்கரையில் இடம்பெறவுள்ள
பிரபல பாடகர் பி.உன்னிகிருஷ்ணன் அவர்களும் அவரது மகள் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சிக்கு ஆன்மீக பேச்சாளராக இந்தியா – திருவண்ணாமலையில் இருந்து தெய்வீக சகோதரி பி.கு.உமா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் 14, 15, 16 திகதிகளில் கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சி இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 17.02.2026 திகதி பி.ப 6.30 மணி தொடக்கம் பி.ப 10.30 மணி வரைக்கும் இந்திய பிரபல பாடகர் பி.உன்னிகிருஷ்ணன் அவர்களும் அவரது மகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான தலைமையகம் இராஜஸ்தானிலும், உலகம் முழுவதும் 5000 கிளைகளை கொண்டுள்ளதுடன் 147 நாடுகளில் அதன் கிளைகள் வியாபித்துள்ளதுடன், இலங்கையில் அதிகமான மாவட்டங்களில் கிளைகள் நிறுவப்பட்டு தெய்வீக செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 25 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் தமது சேவையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0