உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.!

49 பார்வைகள்

2026ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளது.

இதற்காக 1,500 பொலிஸ் அதிகாரிகளும் 600 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மைதானத்தினுள் பெரிய பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாச மைதானத்தைப் பொறுத்தவரை விண்சென்ட் பெரேரா மாவத்தை கிராண்ட்பாஸ் வீதி ஊடாக பபாபுள்ளே பாலச் சந்தியில் இருந்து பபாபுள்ளே பகுதிக்குள் நுழைதல் மற்றும் பபாபுள்ளே பாலத்திலிருந்து மைதானம் நோக்கி வருதல் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மேலும் செபஸ்டியன் கால்வாய் வீதிக்கு அருகிலுள்ள மல்வத்தை பாலம் மற்றும் 100 அடி வீதி – விகாரை வீதிச் சந்தி ஆகியவற்றின் ஊடாக மைதானம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படவுள்ளது.மேலும், மைதானத்திற்கு அருகிலுள்ள மாளிகாவத்தை வீதி பக்கவாட்டு வீதி மற்றும் சத்தர்ம மாவத்தை – கெத்தாராம வீதிச் சந்தி ஊடாக விகாரை வீதிக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.போட்டி நாட்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0