உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
64 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில் முன்னெடுப்போர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் பெருளமானோர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் நீண்டகாலமாக கடல்தொழிலில் ஈடுபட்டுவருவதுடன் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதுடன் தற்போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

உழவு இயந்திரம் மூலம் வலைகள் இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டாம் வேண்டாம் மீனவர்களின் தற்கொலைக்கு காரணமாக வேண்டாம், வாழவிடு வாழவிடு கரைவலை மீனவர்களை வாழவிடு, நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் மீனவர்கள் கற்காலத்திற்கே திரும்ப வேண்டுமா?, மீனவர்களின் அவலநிலை உங்களுக்கு தெரியவில்லையா?போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மீனவர் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் உரிய திணைக்கள தலைவருக்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0