உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தோட்ட வீதியை செப்பனிட உடன் கவனம் செலுத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

203 வருடங்களாக மஸ்கெலியா கிலன்டில் தோட்ட லெங்கா பிரிவில் வசிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்று காலை 11.30 மணிக்கு கறுப்பு நிற கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் தோட்ட பிரிவில் இருந்து கோஷம் எழுப்பிய வண்ணம் சாமி மலை ஓல்ட்டன் பிரதான சாலைக்கு வந்தனர்.

சுமார் 5 கிலோமீற்றர் வீதியை கடந்த 203 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகமோ, மாறி மாறி வந்த ஆட்சியாளர்களோ எம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ கடந்த காலங்களில் இருந்த மாகாண சபை உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபையின் உறுப்பினர்களோ செப்பனிடவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னால் அமைச்சர் மற்றும் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் இணைந்து இந்த வீதியை செப்பனிட அடிக்கல் நாட்டிய போதும் வீதி செப்பனிடப்படவில்லை.

நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை இவ் வழியாக கொண்டு செல்ல தொட்டில் கட்டி தூக்க வேண்டியுள்ளதாகவும் 1990 நோயாளர் காவு வண்டி பிரதான வீதியில் வந்து நின்று விடும் சுமார் 3.5 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்து நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவ்வாறு கொண்டு வரும் வேளையில் பலர் மரணமடைந்து உள்ளனர் எனவும் சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் இடைநடுவில் ஏற்பட்டது.

கடந்த மாதம் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிவித்து நாடு 78 சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் எமக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

நாட்டின் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வந்து எமது தோட்ட வீதியை செப்பனிட உடன் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0