உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்துக் கல்லூரியில் உள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்களினால் கிறிஸ்தவ வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலை கொடி, பழைய மாணவர்கள் கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரியின் ஸ்தாபர் நல்லையா மாஸ்டரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமான என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள ஊட்டப் பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் 80ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருமளவான மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியானது 1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முன்னாள் கல்குடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நல்லையா மாஸ்டர் என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0