திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகா வித்தியாலயத்தின் 49 ஆவது பாடசாலை தினம்.!
திருகோணமலை இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் 49 ஆவது பாடசாலை தினம் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. சு. யுவராஜா தலைமையில் சனிக்கிழமை (31) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்) ந. பரமேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
விழாவில் பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் பாடசாலை சமூகத்தால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


