உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் பாலர் பாடசாலைக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
59 பார்வைகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வசிக்கு நர்மதா தினேஸ் அவர்களின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் அவர்களின் நிதியுதவியின் கீழ் திருகோணமலை மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் கோகுலம் பாலர் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான க.இன்பராசா தலைமையில் இவ்வுதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஒன்றியத்தின் ஆலோசகர் பா.மதன், ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் சி.மதிசன், பாலர் பாடசாலை பிரதான ஆசிரியை உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தத்தில் அதிகம் பாதிப்புற்ற, 1996ஆம் ஆண்டு 25க்கும் மேற்பட்ட இனப்படுகொலை இடம்பெற்றதும், பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை அதிகமாகக் கொண்டதுமான கிராமமான குமாரபுரத்தில் இவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்ப சிறார்கள் கல்வி கற்கும் குறித்த பாலர் பாடசாலை தேர்வு செய்யப்பட்டு இவ்வுதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வித அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத இக்கிராம சிறார்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் ஒன்றியமான புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியின் மூலம் இவ்வாறான உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0