உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
83 பார்வைகள்

​மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக கழகத் தலைவர் ம.ஐங்கரன் தலைமையில் நேற்று 24.01.2026 காலை சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கிராம பாரம்பரிய முறைப்படி தமிழர்களின் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப, வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டில்கள் சகிதம் பொங்கல் பானைகள், விவசாய உபகரணங்கள் என்பன உழவர் பெருமையை எடுத்தியம்பும் வண்ணம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் அமைந்துள்ள உழவர் சிலை முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரியபகவானுக்கு வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், ஆசியுரை தலைமையுரை, அதிதிகள் உரை, விவசாயிகள் கெளரவிப்பு மற்றும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
​
இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளருமான த. பிரபாகரன், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மா.ஜெயம்பலம் குருக்கள், வந்தாறுமூலை மேற்கு கிராம உத்தியோகத்தர், வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், முன்னாள் கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வந்தாறுமூலை மகா விஷ்ணு, நீர்முகப் பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

13 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0