உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
103 பார்வைகள்

ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த நோயாளர் காவுவண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க வைத்தியசாலைக்குச் சொந்தமான குறித்த நோயாளர் காவுவண்டி தம்புள்ளை – ஹபரணை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏறாவூர் நகர சபை உறுப்பினரான அல்ஹாபிழ் உவைஸ், ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் முகம்மது சக்கூர், அவரது மனைவி, நோயாளர் காவுவண்டி சாரதி முகம்மது அஸீம் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

17 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0