உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
85 பார்வைகள்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்துள்ள யானைகள் அடிக்கடி வவுணதீவு பிரதேசத்திற்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது.

வவுணதீவு பிரதேசத்தில் உள்ள வயல்களை தொடர்ச்சியாக யானைகள் சேதமாக்கிவந்துள்ளன. தற்போது அறுவடை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் யானைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக நேற்று இரவு வனஜீவராசிகள் திணைக்களமும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து குறித்த யானைகளை அப்பகுதிகளிலிருந்து காடுகளுக்குள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்பதுக்கும் மேற்பட்ட யானைகள் இவ்வாறு புகுந்துள்ளதன் காரணமாக வவுணதீவு பகுதி மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனேயே கழித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

யானைகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

பொதுமக்களின் முறையான ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அதனை செயற்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

13 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0