உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மட்டக்களப்பு இளைஞன் ரினோசனின் உயிரிழப்பு தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது.

இன்றைய தினம் உயிரிழந்த இளைஞனின் குடும்பம் சார்பில் கொழும்பிலிருந்து வந்த சட்டத்தரணிகளான ஜெயரெட்ணராஜா, சேனக பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பதில் நீதிவானால் இன்றைய தினம் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் பெற்றோரின் சந்தேகம் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் பதில் நீதவானாக கடமையாற்றுவதன் காரணமாக பிறிதொரு நாளில் இதனை பதிவு செய்யுமாறு நீதவான் தெரிவித்ததாக சட்டத்தரணி ஜெயரெட்ணராஜா தெரிவித்தார்.

இதேபோன்று கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ள உடற்கூற்று பரிசோதனை அறிக்கை தாமதம் ஆகுவதன் காரணமாகவும் வழக்கானது எதிர்வரும் மாசி மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0