உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பொங்கல் வழிபாடுகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும், வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0