உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலையில் வீதிக்கு இறங்கிய வர்த்தகர்கள்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
57 பார்வைகள்

திருகோணமலை மாநகர சபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி வழியாக மாநகர சபை வரை சென்றது. அங்கு மாநகரசபை கட்டிடத்திற்கு முன்பாக திரண்ட வர்த்தகர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தகர்கள், வீதியோர வியாபாரிகளை தடை செய், வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து, உள்ளூர் வர்த்தகம் – உள்ளூர் வளர்ச்சி, தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சிலர் மாநகரசபை முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது தற்காலிக வியாபாரிகளிடம் மாநகர சபையினால் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவற்றை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும் எனினும், வருங்காலங்களில் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதிக்காத வகையில் அனுமதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மேலும், மாநகரசபையின் வருமானம் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்பில் உள்ள நெருக்கடிகள் குறித்தும் முதல்வர் இதன்போது தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0