கல்வி அமைச்சிற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்.!
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.




