உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
81 பார்வைகள்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம்.சாலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பா. விபூசிதன், பொருளாளர் பி. பிரசாத், சிரேஷ்ட உபதலைவர் வடமலை ராஜ்குமார், கனிஷ்ட உபதலைவர் ஏ. எல். ரபாய்தீன்பாபு, உபசெயலாளர் மங்களநாத் லியனாராச்சி தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக

  1. அ. அச்சுதன்
    02.ஏ.ஆர்.எம்.றிபாஸ்,
    03.ஏ.எச்.ஹஸ்பர்
    04.எஸ்.கயக்கிரிவன்
    05.திருமதி பி. லோஜினி
    06.எம்.எல்.எம்.அஸ்வர்
    07.ஏ.எம்.இப்ராஹிம்
    08.ஜி.நிக்கிதொம்சன்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்லின சமூகத்தை கொண்டவர்களை கொண்டு இயங்கும் ஒரே ஊடக சங்கமாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் திகழ்கிறது. இதன் மூலம் நல்லிணக்க பயணத்துக்கு ஒரு முன்னூதாரனமாக குறித்த ஊடக சங்கம் காணப்படுகிறது.

இதன் போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜே.எம்.சாலி உரையாற்றுகையில் எமது சங்கம் பல உறுப்பினர்களை இழந்துள்ள நிலையில் அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம். சுமார் ஐம்பதாண்டு கால ஊடக வரலாற்றை கொண்ட சங்கமாக நாம் பயணிக்கிறோம். எதிர்காலத்தில் திறம்பட இயங்குவதற்கு அனைவரதும் சக உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0