உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
53 பார்வைகள்

நானுஓயா ரதல்ல மேற் பிரிவில் காணப்படுகின்ற(CGR) வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி இன்று (09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தில் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் இத் தோட்டத்திலிருந்து நுவரெலியா ஹட்டன் பிரதான வீதிக்கு செல்லும்‌ 5 கிலோமீற்றர் தூரங்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இங்கு வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் இப்பாதை காணப்படுவதாக தெரிவித்து இப்பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கை கோஷங்களை எழுப்பியவாறும் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த அரசாங்கத்தில் புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு அடிக்கல் நட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது இப்பாதையின் ஊடாக செல்ல முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.

இப்பாதையினை உடனடியாக செய்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0