உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் கூறியுள்ளது.

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

கடந்த 35 நாட்களில் மட்டுமே 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும், ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த முஷ்தபிஜூர் ரகுமான், கோல்கட்டா அணியில் இருந்து விலக்கப்பட்டார்.இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.டில்லி, கோல்கட்டா, சென்னை,மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பங்களாதேஷ் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வணிக மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களைத் தவிர, இந்தியர்களுக்கு ஏனைய வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0