உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது.!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது, ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர்.மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0