உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டி20 போட்டி இன்று!

46 பார்வைகள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரானது இன்று ஆரம்பமாகவுள்ளது.தொடரின் முதல் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகும்.

பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக நடைபெற்றும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாக அமைகிறது.இரு அணிகளும் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த டி20 முத்தரப்பு தொடரின் போது சந்தித்தன.

அங்கு பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி, அண்மையில் டி20 போட்டியில் நிலைத்தன்மை மற்றும் நம்பகமான துடுப்பாட்ட மையத்தைக் கொண்டிருப்பதால் இலங்கையை விட சற்று முன்னிலை வகிக்கிறது.

அதேநேரத்தில் இலங்கை அணி, சொந்த மைதானத்தில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.மேலும் தசூன் ஷானக்கவின் தலைமைத்துவ பொறுப்பும் அணிக்கு வலுச்சேர்க்கிறது.எனினும், இலங்கை அணியின் நடுத்தர துடுப்பாட்ட வரிசையானது கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளன.பாகிஸ்தான் அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

72 0 0