உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வகுப்பு தோழியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய நபர்: தொடர்ந்த அசம்பாவிதங்கள்.!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கணவனைப் பிரிந்த தனது வகுப்புத் தோழியிடம், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வறுபுறுத்தியுள்ளார் ஒருவர். அந்தப் பெண் மறுக்கவே, அவரை கொலை செய்துவிட்டார் அவர்.இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள உத்தர கன்னடா என்னுமிடத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (Ranjitha Bhanasode, 29), கணவனைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.

ரஞ்சிதாவின் வகுப்புத் தோழரான ஒருவர், அடிக்கடி அவரது வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் ரஞ்சிதாவை வற்புறுத்த, மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார் ரஞ்சிதா.திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவருடனான தொடர்பையே துண்டித்துள்ளார் ரஞ்சிதா.

இந்நிலையில், சனிக்கிழமையன்று பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சிதாவைப் பின் தொடர்ந்த அந்த 30 வயது வகுப்புத் தோழர், ரஞ்சிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் ரஞ்சிதா.

தலைமறைவான கொலையாளியை பொலிசார் தேடிவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, மரங்களடர்ந்த ஒரு பகுதியில், மரம் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0