உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ILT20 தொடர் – முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கரனின் DV அணி.!

20 பார்வைகள்

ILT20 தொடரில் டெசர்ட் வைபர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ILT20 தொடர் கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 4 ஆம் திகதி வரை நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், டெசர்ட் வைபர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, அணித்தலைவர் சாம் கரன் 74 ஓட்டங்கள் குவித்தார்.டெசர்ட் வைபர்ஸ் வெற்றி 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ், 18.3 ஓவர்களில் 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், டெசர்ட் வைபர்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ILT20 கிண்ணத்தை வெற்றி பெற்றது.சாம் கரண், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் மொத்தமாக 397 ஓட்டங்கள் குவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் ILT20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெசர்ட் வைபர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.சாம்பியன் பட்டம் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி 7 லட்சம் டொலர் பரிசுத்தொகையை வென்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0