உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

செல்சி கால்பந்து அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்!

16 பார்வைகள்

இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கழகத்தின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பணி புரிந்து வருகிறார்.அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கொன்பரன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கோப்பையை வென்று சாதித்தது.

ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயற்பாடு மந்த நிலையில் இருக்கிறது. கடைசி 7 லீக் போடடிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் காணப்படுகிறது.இந் நிலையில் அவருக்கும், கழக நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

செல்சி கழகத்தில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.இந் நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று இராஜனாமா செய்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0