கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் நேற்று (01) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜமனராஜ் ஜதுர்ஷன் என தெரியவருகிறது.
அதிவேகம் காரணமாக உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.