உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஊழல் ஒழிப்பைத் தவிர வேறு கொள்கை இல்லை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
32 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்தத் திட்டத்தைத் தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை என்றும், மற்றொரு வர்க்கத்துக்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டி வருவதை அவர்கள் இன்னும் சரிசெய்து கொள்ளவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“தற்போதைய அரசு குறித்து எனது முறைப்பாடு என்னவென்றால், மிகச் சிறப்பாக இருந்த ஊழல் ஒழிப்பு விடயத்தைத் தவிர அவர்களிடம் வேறு எந்தக் கொள்கையும் இருக்கவில்லை என்பதுதான். வேறொன்றும் இல்லை. மற்றொரு வர்க்கத்துக்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டிவிடுவதைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தற்போதும் அவர்கள் அதைச் சரிசெய்து கொள்ளவில்லை.

கொள்கை ஒன்று இன்றி மக்களிடம் பேச முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன். கொள்கை ஒன்றை முன்வைக்காமல் எவ்வாறு ஒருவரால் மக்களிடம் வாக்குக் கேட்க முடியும்? ‘என் முகத்தைப் பார்த்து வாக்களியுங்கள்’ என்பதற்காக அல்ல, தமது கொள்கையை மக்களுக்குக் காட்டி, இதற்காகத்தான் வாக்களிக்க வேண்டும் எனக் கூற வேண்டும். எம்மில் பலர் செய்வதும் அதையேதான்.” – என்றார்.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்றத்திலும் பல்வேறு கட்சிகளிலும் உள்ளவர்கள் தலைமைத்துவத்தை எடுப்பார்கள் எனக் காத்திருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எவ்வாறு கேட்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் உரையாற்றிய அவர்,
“தற்போதைய நாடாளுமன்றத்தை அல்ல, அதற்கு ஒன்று அல்லது இரண்டு நாடாளுமன்றங்களுக்கு முந்தைய நாடாளுமன்றம் ஒன்றில் பட்டதாரிகள் சுமார் 20 பேர் மாத்திரமே இருந்தனர். பலருக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைத் தகுதி கூட இருக்கவில்லை. அப்படியிருக்கையில், அவர்கள் எவ்வாறு ஒரு நாட்டை ஆள முடியும்? அவர்கள் எமது நாட்டை அழித்துவிட்டனர்.

எமது நாடு இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு நாடாகும். அவற்றில் பெரும்பாலானவை இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் காரணமாக எங்களிடம் மிக உயர்ந்த மட்டத்தில் விருத்தி செய்யப்பட்ட மனித வளம் உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றாக நாம் உள்ளோம். ஒருமித்த தேசத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போனமையே இதற்கு நிச்சயமான காரணமாகும்.

சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளைத் தாண்டி அனைத்துப் பிரஜைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சமத்துவமின்மையே இலங்கை உண்மையான உன்னத நிலையை அடைவதைத் தடுத்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பதவி உயர்வு.!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச்…

32 0 0
இலங்கை செய்திகள்

பேருந்தின் மீது உருண்டு விழுந்த கற்பாறை; ஒருவர் உ**யிரிழப்பு.!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, மலை உச்சியிலிருந்து கற்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் அப்பேருந்தில் பயணித்த…

26 0 0
இலங்கை செய்திகள்

இருவேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி இருவர் உ**யிரிழப்பு.!

நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தவகையில், தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹலியத்த பிரதேசத்தில் நபர் ஒருவர்…

33 0 0
இலங்கை செய்திகள்

பணவீக்கம், வறுமையால் மக்கள் வாழ முடியாத நிலை.!

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பணவீக்கம் 9 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய…

34 0 0