உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கறுப்பு ஜூலை வன்முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு.!

இலங்கை செய்திகள் 19 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் முக்கியப் பொறுப்பாகும்.

அத்துடன், தேசிய நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதுடன், அக்கால வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் ஆராயவுள்ளது.

அரசு மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் விவரம் வருமாறு,
01. அமைச்சர் சரோஜா போல் ராஜ் – தலைவர்
02. அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
03. பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
04. பிரதி அமைச்சர் முனீர் முலாபர்
05. நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
06. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
07. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
08. நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி
09. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க
10. நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார
11. நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க
12. நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க

பின்னணித் தகவல்
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ‘கறுப்பு ஜூலை’ எனக் குறிப்பிடப்படுகின்றன.

இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்தமையுடன், சொத்துகள் சேதமடைந்து பலரும் இடம்பெயர்ந்தனர்.

இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக இந்தச் சம்பவங்கள் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுற்றுலா விடுதிகளின் வரி அறவீடுகள்; அரசிடம் சாணக்கியன் சரமாரியான கேள்வி.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட…

37 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரூபன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய…

31 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பாடசாலை மாணவன் உ**யிரிழப்பு.!

கம்பளை – புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாடகை…

34 0 0
இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக்…

38 0 0