உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
38 பார்வைகள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று வெள்ளிக்கிழமை (27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை (27) மாலை 6.5 மணியளவில் இரண்டு மாவீரர்களின் தந்தையால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி கட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்து மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வந்திருந்தனர்.

இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள் இணைந்து மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆறு முக்கிய தீர்மானங்கள்!

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் பாவனை, சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்…

31 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய (27) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. மாவடிமுன்மாரி துயிலும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளன. இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, மணியோசை…

44 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம…

49 0 0