உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ள அனர்த்தத்தில் உ**யிரிழந்தவர்களின் நினைவாக விசேட துஆப் பிரார்த்தனை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
39 பார்வைகள்

2024 நவம்பர் 26ஆம் திகதி காரைதீவு – மாவடிப்பள்ளிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேரின் நினைவாக, அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரால் நேற்று(26) வியாழக்கிழமை சம்மாந்துறை கலாச்சார மண்டபத்தில் விசேட துஆப் பிரார்த்தனையும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இக்குழுவின் தலைவர் எஸ்.எம்.பிரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வையும் மீட்புத் தயார்நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக…

23 0 0
இலங்கை செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.!

அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உயிர்காப்பு, அவசரகால மீட்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.…

38 0 0
இலங்கை செய்திகள்

போலி இணையத்தளத்தை உருவாக்கி பண மோசடி; இளைஞன் கைது.!

தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளத்தை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர்…

37 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் இருப்பையும், உரிமைகளையும் நலிவடையச் செய்வதே இலங்கை அரசின் நீதி.!

ஈழத்தமிழினத்தின் இருப்பையும் தாயக தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் நலிவடையச் செய்தலே இலங்கை அரசின் நீதி என ஆகிவிட்டநிலையில், தேசிய ஒருமைப்பாட்டை நாங்கள் எங்கே தேடுவது என…

23 0 0