பருத்தித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு.!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பிறந்தநாள் வாழ்த்து வாசகங்கள் பொறிக்கப்பட்ட கேக் காட்சிப்படுத்தப்பட்டு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரை வீதி அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த கொடி மேடைக்கு முன்பாக நேற்று மாலை 5.30 மணிக்குப் பலரும் ஒன்றுகூடி இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் வீதியால் பயணித்த பொதுமக்களுக்குச் சிற்றுண்டிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கேக் முன்பாக பலரும் படங்கள் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, இறுதியாகக் கேக் வெட்டப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





