உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
38 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உயிர்காப்பு, அவசரகால மீட்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதன் முதற்கட்டமாக, Voice of Peace Sri Lanka அமைப்பின் தலைவரும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம். றியாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், உயிர்காப்புக் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடையே அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரின் பங்களிப்புடன் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்கான அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியொன்றை விரைவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் Social TV Media Network இன் ஸ்தாபகப் பணிப்பாளர் எம். சிராஜும் கலந்துகொண்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் மற்றும் அம்பாறை பிரதேச உயிர்காத்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அம்பாறை பொலிஸ் நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினருக்கு படகு செலுத்துதல், நீச்சல், நீர்நிலை மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவத் தயார்நிலையை மேம்படுத்துவதுடன், அவசரகாலச் சூழ்நிலைகளில் திறம்பட செயற்படக்கூடிய பயிற்றப்பட்ட உயிர்காப்பு மற்றும் மீட்புக் குழுவினரை உருவாக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இருவேறு சம்பவங்களில் உ**யிரிழந்த இளைஞர்களின் சட**லங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக…

32 0 0
அம்பாறை செய்திகள்

அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24)…

128 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் இருவேறு கோர விபத்துக்கள்; இளைஞன் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கல்முனை, தரவை…

123 0 0
அம்பாறை செய்திகள்

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உ**யிரிழப்பு; அதிகாலையில் நடந்த துயரம்.!

அம்பாறை தமன பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தமன மொரகஹப்பள்ளம் (இல.…

131 0 0