இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது தனியார் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


