உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியா வடக்கில் 13,000 ஏக்கர் வனம் அழிக்கப்படவுள்ளது : நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்பி குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் வனப்பாதுகாப்பு பிரதேசங்களும், தேசிய பூங்காக்களும் வேட்டைக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வனவளங்களை அழிப்பவர்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள விடயம் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான இன்றைய (04.11.2026) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களே இந்த விடயத்தை சபையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்கால நோக்கற்ற செயற்பாடுகளும் வன வளங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வவுனியா வடக்கில் ஒரு மணி நேரத்திற்கு முன்புகூட 45 வயதுடைய விவசாயி ஒருவர் வயலுக்குச் சென்றபோது யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஊருக்கு அண்மையில் உள்ள குளவிசுட்டான் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை வவுனியா வடக்கின் நயினாமடு பகுதியில் அமைக்க ஆரம்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தற்போது அங்கிருந்து மிகவும் குறைந்த மக்கள் வாழுகின்ற போகஸ்வெவ பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டதோடு குறித்த அலுவலகத்தினை நயினாமடு பகுதியிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், வவுனியா நகரப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், வீடுகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்கும், குரங்குகளின் தொல்லைக்குத் தீர்வு காண்பதற்கும் விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்! – ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் அழைப்பு

அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்துச் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை…

75 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சியைப் பிடிக்க நாங்கள் வரவில்லை! தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுக்கின்றோம்!

சமத்துவம் தொடர்பில் பேசும் தற்போதைய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும் என்றும், கடந்த அரசுகள் செயற்பட்டதைப் போன்று இந்த அரசும்…

69 0 0
இலங்கை செய்திகள்

அநுரவின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே நிரம்பியிருக்கும்!- நாமல் எம்.பி. கடுமையாகச் சாடல்

பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் வல்லவர் என்றும், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை…

65 0 0