உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காலிமுகத்திடல் தாக்குதல் : தென்னக்கோன், ஜோன்ஸ்டன் உட்பட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

கொழும்பு, காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 37 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதற்கமைய, சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாகச் சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.” – என்று குறிப்பிட்டனர்.

இந்த வழக்கின் 26ஆவது சந்தேகநபரான மஹிந்த கஹந்தகம இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை.

அதற்கமைய, மேற்படி சந்தேகநபரை அடுத்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை…

61 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் 17 மில்லியன் டொலருக்காக சீனாவின் 392 மில்லியன் டொலரை இழந்தோம்- முஜிபுர் ரஹ்மான் விசனம்!

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

வவுனியா வடக்கில் 13,000 ஏக்கர் வனம் அழிக்கப்படவுள்ளது : நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்பி குற்றச்சாட்டு!

வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக…

82 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நான்கு…

85 0 0