உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெருந்தோட்டத்துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
86 பார்வைகள்

இன்றைய தினம் (04) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, பெருந்தோட்டத்துறையில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் அவற்றின் எதிர்காலப் பயன்பாடு குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக்காட்டிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பெருந்தோட்டத் துறையில் உள்ள தரிசு நிலங்கள் குறித்த தற்போதைய நிலைப்பாட்டை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தினார்.

மேலும், பெருந்தோட்டத் துறையில் காணப்படுகின்ற தரிசு நிலங்கள் ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டு, அமைச்சரவையின் முறையான அனுமதியைப் பெற்றே சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

குறிப்பாக, எதிர்காலத்தில் மலையகப் பிரதேசங்களில் வாழும் இளைஞர், யுவதிகளின் சுயதொழில் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்தக் காணிகள் அவர்களுக்கு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அநுர அரசுக்குச் சிறந்த பாடம் : சஜித் எச்சரிக்கை!

“தேசிய மக்கள் சக்தி அரசின் உறுப்பினர்களே, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். மக்கள் நலன்புரித் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாலும் விலைவாசி உயர்வாலும் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதைப்…

65 0 0
இலங்கை செய்திகள்

முறிகண்டியில் இராணுவக் குடியிருப்புக்களுக்காக அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன – சபையில் பகிரங்கப்படுத்திய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர்பிரிவில், முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள அடர்வனப்பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்களை ஏற்படுத்துவதற்காக பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கப்படுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…

58 0 0
இலங்கை செய்திகள்

துணிவிருந்தால் உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.!

அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். முன்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத்…

73 0 0
இலங்கை செய்திகள்

இழப்பீடு வழங்குதலின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்.!

இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இழப்பீடு வழங்குதலின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று 04.11.20226 மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…

85 0 0