உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இழப்பீடு வழங்குதலின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
80 பார்வைகள்

இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இழப்பீடு வழங்குதலின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று 04.11.20226 மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இழப்பீட்டு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் இழப்பீடு வழங்குவதற்கான புதிய விண்ணப்பங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், பிரதேச செயலாளர்கள், இழப்பீட்டு அலுவலக மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் கருத்து தெரிவிக்கையில்,

சொத்தழிப்புக்கான கொடுப்பனவுகள்
இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளனர்.

மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
உச்சநீதிமன்றத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக, இதுவரை இந்தப் பயனைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, தற்போது 10,800 குடும்பங்கள் மீளவும் அந்தப் படிவங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் படிவங்களைப் பூர்த்தி செய்து கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காணாமல் போனோர் பதிவு
மாவட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களாக 1,225 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 685 பேர் காணாமல் போனூருக்கான 2 இலட்சம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுள்ளனர்.

வன்செயல் பாதிப்புகள்
வன்செயல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் கடுங்காயம் அடைந்தவர்கள் என மாவட்டத்தில் இதுவரை 4,999 பேருக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இக்கொடுப்பனவுகள் மற்றும் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் பிரதேச செயலகத்தையோ அல்லது மாவட்ட செயலகத்தையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தோட்டத்துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும்.!

இன்றைய தினம் (04) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, பெருந்தோட்டத்துறையில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் அவற்றின் எதிர்காலப் பயன்பாடு குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு…

76 0 0
இலங்கை செய்திகள்

துணிவிருந்தால் உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.!

அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். முன்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத்…

66 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளர் கடமையேற்பு.!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.…

81 0 0