தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா இன்று!
தமிழ்நாட்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள விழாவில், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 186 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கிப் பாராட்டி, கௌரவிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


