உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

துணிவிருந்தால் உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
118 பார்வைகள்

அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.

முன்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத் தெய்வங்களாகக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியினர் (மாலிமா), இன்று ஆடம் ஸ்மித் போன்ற பொருளியலாளர்களைத் தெய்வங்களாகக் கொண்டு, இடது பக்கம் சிக்னல் போட்டுவிட்டு வலது பக்கமாகச் செல்லும் புதிய தாராளவாதத்தின் முதன்மைத் தந்தைகளாக மாறிப்போயுள்ளனர் என்றும் அவர் சாடினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்றும் தவறான மற்றும் அறிவியல் அடிப்படையற்ற தரவுகளின் அடிப்படையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி என அனைத்தும் இருக்க வேண்டும். ஆனால் அஸ்வெசும திட்டத்தில் நுகர்வு மட்டுமே காணப்படுகின்றது.

நாட்டின் வறுமைக்கோடு என்னவென்றே தெரியாமல் வரவு – செலவுத் திட்ட உரையை வாசிக்க அரசு தயாராகி வருகின்றது. நாட்டில் வறுமை 30% – 40% ஆகக் காணப்படும் வேளையில், 18 – 24 வயதுடைய இளைஞர்களிடையே மிக அதிகளவிலான வேலையின்மை நிலவுவது இலங்கையில்தான் எனச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்றதே தவிர நாட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வரி வருமான இலக்குகளைக் குறிப்பிடும்போது, மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையைச் சுமத்தி அதனை அரசு மேலும் உயர்த்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் அளித்த பெற்றோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, இன்று எரிபொருள் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

மக்களின் பொருளாதார உரிமைகளை மீறிக்கொண்டே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்களை அரசு கொண்டுவருகின்றது. அரசியல் ரீதியாகத் தமக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.

அரசு ஜனநாயகத்தை அழித்து மக்களாணையைக் காட்டிக்கொடுத்து வருகின்றது. எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் கூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன்.

இப்போதாவது வரிச்சுமைகளைக் குறைத்து மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, வேலையற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம் பட்டதாரிகளுக்கும், ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலைக்கஞ்சி வழங்கலும்.!

தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், அராலி மத்திய சித்த மருந்தகத்தில் விழிப்புணர்வுக்…

64 0 0
இலங்கை செய்திகள்

உணவு ஒவ்வாமை; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வட்டவளை பொலிஸ்…

79 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

நுவரெலியா, வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கெட்டிவெல பகுதியில் அயலவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், நேற்று (16) திங்கட்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை…

82 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவன் தேசியத் தலைவர் பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்று பார்வை.!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்று இன்றையதினம் பார்வையிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்…

71 0 0