உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

இலங்கைக்கு எதிராக லாகூரில் கடந்த சனிக்கிழமை (31) நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துகளை வீசி முடிக்காததால் பாகிஸ்தான் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி நேரத்தை கணக்கிட்ட பிறகு, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருப்பது கண்டறியப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ICC) ஒழுக்கக் நெறிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷஹீன் அஃப்ரிடி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ஏற்றுக்கொண்டதால், இது குறித்த முறைசார் விசாரணைகளின் தேவை தவிர்க்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 326 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இது ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியொன்றில் எட்டப்பட்ட கூட்டு அதிகபட்ச இலக்காகும் (Joint highest chase) என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு 20 போட்டியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான 5ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட…

82 0 0
விளையாட்டுச் செய்திகள்

‘ஃபோர்மியுலா 1’ பந்தய உலகின் புதிய சகாப்தம்! : கிண்ணத்தைக் கைப்பற்றிய இளம் வீரர்

2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்மியுலா 1 உலக செம்பியன்ஷிப் தொடரை இத்தாலியின் வளர்ந்து வரும் நட்சத்திர பந்தய வீரரான கிமி என்டோனெலி (Kimi Antonelli) கைப்பற்றி வரலாற்று…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

116 0 0
விளையாட்டுச் செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லசித் மலிங்க உள்ளிட்ட மூன்று பயிற்சியாளர்கள் விலகல்!

2027ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய, முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித்…

94 0 0