உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு 20 போட்டியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இந்திய அணிக்கு எதிரான 5ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


நியூசிலாந்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.


இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், 4ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.


இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும் இறுதியுமான போட்டி ஹமில்டனில் இன்று நடைபெற்றது.


இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் (50) மற்றும் இஷான் கிஷன் (61) ஆகியோர் அரைசதங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.


192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் டிம் சேஃபர்ட் (Tim Seifert) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 93 ஓட்டங்களை குவித்தார்.


அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 38 பந்துகளில் 65 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் (Daryl Mitchell) 16 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.


இதன் மூலம் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.


இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றபோதிலும், தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்ட இந்திய அணி தொடரைத் தன்வசப்படுத்தியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

இலங்கைக்கு எதிராக லாகூரில் கடந்த சனிக்கிழமை (31) நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துகளை வீசி முடிக்காததால் பாகிஸ்தான் அணிக்கு போட்டிக்…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

‘ஃபோர்மியுலா 1’ பந்தய உலகின் புதிய சகாப்தம்! : கிண்ணத்தைக் கைப்பற்றிய இளம் வீரர்

2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்மியுலா 1 உலக செம்பியன்ஷிப் தொடரை இத்தாலியின் வளர்ந்து வரும் நட்சத்திர பந்தய வீரரான கிமி என்டோனெலி (Kimi Antonelli) கைப்பற்றி வரலாற்று…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

116 0 0
விளையாட்டுச் செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லசித் மலிங்க உள்ளிட்ட மூன்று பயிற்சியாளர்கள் விலகல்!

2027ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய, முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித்…

94 0 0